இரட்டை மாலை திருக்கோவிலில் தம்புரான் விழா

65பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலைப்பட்டியில் இரட்டை மாலை திருக்கோவில் உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோவில் திருவிழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு சேவையாட்டம், கும்மியாட்டம், தேவராட்டம் மற்றும் பல வேஷங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பெரியோர்கள் முன்னிலையில், விளவை கூடை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. எருது ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட எருதுகளை சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை செய்து, எருதுகளை ஓட விட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. நிகழ்ச்சியில், திண்டுக்கல் மதுரை தேனி உள்ளிட்ட பல மாவட்ட கிராமங்களில் இருந்தும், நிலக்கோட்டை, மாலைப்பட்டி மற்றும் இதனை சுற்றி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி