சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் கார் பார்க்கிங் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும்
புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் கொடைக்கானல் பேருந்து நிலைய டெப்போ
பகுதியில் கார் பார்க்கிங்
அமைப்பதற்கு 3. 25 ஏக்கர் நிலம் நகராட்சி கையகப்படுத்திக் கொள்ள சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை
அமைச்சர் உறுதி அளித்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பனீந்தர்ரெட்டி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர்
சத்தியநாதன், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். முழுமையாக ஆய்வு செய்த போக்குவரத்துதுறை முதன்மை
செயலாளர் எந்த முடிவையும் தெரிவிக்காமல் அமைச்சரிடம் பேசிக் கொள்வதாகக் கூறிச் சென்றார்.