ஹரியானா: ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஓம்பிர் என்ற நபர் தனது மனைவி சரிதாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, வளர்ப்பு விலங்குகளுக்கு உணவளிப்பது தொடர்பாக தம்பதி இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில், மனைவி சரிதாவின் தலையில் கணவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். தொடர்ந்து, அவர் போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.