திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினந்தோறும் கல்வி,
வேலை வாய்ப்புக்காக திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நகரங்களில் இருந்து தனியார் பஸ்கள் போதுமான அளவு இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் இரவு 8 மணிக்குமேல் அரசு பஸ்கள் திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால்
வேலை மற்றும் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் மக்கள் அடுத்தடுத்து டவுன் பஸ்களை பிடித்து ஊருக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதோடு பண விரையமும் உண்டாகிறது. எனவே இரவு 10 மணி வரை நிலக்கோட்டைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.