நிலக்கோட்டை: 13 வயது பள்ளி மாணவி தூக்கிலிட்டு தற்கொலை

83பார்த்தது
நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்தவர் 13 வயது சிறுமி ஒருவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மாணவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் படிப்பில் பின் தங்கியதாக கூறப்படுகிறது

இதனால் பள்ளியிலும் வீட்டிலும் தனது படிப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்

இதனிடையே நிகழ்வு நேரத்தில் வீட்டின் குளியலறைக்குள் சென்ற பள்ளி மாணவி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை வீட்டிலிருந்தவர்கள் குளியலரை கதவை உடைத்து பார்த்த போது துப்பட்டாவில் தூக்கிலிட்டு கொண்டுள்ளார்
மாணவியை மீட்டபெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி