கொடைக்கானல்: பட்டா இடத்தில் ஏற்பட்ட தீ பரவி வருகிறது

63பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் வனப்பகுதி மற்றும் பட்டா இடங்களில் கடும் தீ ஏற்பட்டு வரக்கூடிய நிலையில் இன்று கொடைக்கானலில் அப்சர்வேட்டரி சாலையில் உள்ள பட்டா இடங்களில் ஏற்பட்ட தீ பற்றி எரிந்து வருகிறது.


காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ தொடர்ந்து பரவி வருகிறது.
இதனால் அப்சர்வேட்டரி சாலை மற்றும் ஏரி சாலையில் கடும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.



மேலும் பட்டா இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள் தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி