பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

1051பார்த்தது
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: - தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று (26. 03. 2024) தொடங்கி 08. 04. 2024-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 200 பள்ளிகளுக்கு 65 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 7. 948 மாணவர்கள், 8, 123 மாணவிகள், தனித்தேர்வர்களில் 240 மாணவர்கள், 157 மாணவிகள் என 8, 188 மாணவர்கள், 8280 மாணவிகள் என மொத்தம் 16, 468 மாணவ, மாணவிகளும்,

பழனி கல்வி மாவட்டத்தில் 150 பள்ளிகளுக்கு 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 4. 514 மாணவர்கள் மற்றும் 4, 668 மாணவிகள், தனித்தேர்வர்களில் 130 மாணவர்கள். 125 மாணவிகள் என 4. 644 மாணவர்கள், 4, 793 மாணவிகள் என மொத்தம் 9, 437 மாணவ, மாணவிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 350 பள்ளிகளுக்கு மொத்தம் 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 12, 832 மாணவர்கள், 13, 073 மாணவிகள் என மொத்தம் 25, 905 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி