கங்கனா ரனாவத்துக்கு போட்டியாக மற்றொரு பாலிவுட் நடிகை..?

45585பார்த்தது
கங்கனா ரனாவத்துக்கு போட்டியாக மற்றொரு பாலிவுட் நடிகை..?
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை யாமி கௌதமுக்கு சீட் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இது வதந்தி என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக யாமி கெளதம் உடன் இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று ஹிமாச்சல் காங்கிரஸின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை கங்கனா, தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை யாமி கௌதம் தமிழில், கௌரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி