உலக மக்கள் தொகை தினம் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள்தொகை 23. 34 இலட்சமாக உள்ளது. மக்கள்தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, நகர வளர்ச்சித்துறை, உணவு மற்றும் பொது விநியோகம், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும். குடும்ப நல சேவைகள் 11. 07. 2024 முதல் 24. 07. 2024-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ளது.

குடும்ப நல சேவையில் லேப்ராஸ்கோபிக் முறையை செயல்படுத்துவதில் திண்டுக்கல் மாவட்டம், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், நவீன தழும்பில்லா கருத்தடை அறுவை சிகிச்சை(என்எஸ்வி) முறையை செயல்படுத்துவதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலம் கௌசல்யாதேவி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி