காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு வழங்கினர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மீது கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்குகள் உள்ளதாக கூறியிருந்தார், உண்மையைத்தான் கூறினார். இதில் பொய் ஏதுமில்லை செல்வப் பெருந்தகை தன் மீது வழக்கு இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் கூறியிருந்தார்.

நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொடும்பாவி எரித்த பொழுது பொதுமக்கள் அச்சத்தில் அங்கிருந்து ஓடினர் மேலும் காவல்துறையினருக்கும் காங்கிரஸினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதே போல் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் பகுதிகளில் மற்றும் மாநகர மையப் பகுதிகளில் திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது புகார் மனு வழங்கியுள்ளதாக கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி