நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

55பார்த்தது
நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் முதிர்வு காலம் முடிந்தும் பணம் தராமல் இழுத்தடிக்கும் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

காந்திநகர் பகுதியில் எஸ். எம். சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி சுற்று பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளராகியுள்ளனர். தினசரி, நிரந்தர வைப்பு, மாத வசூல் என பல்வேறு தவணைகளில் நிதி நிறுவனத்தினர் பணத்தை வசூலித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதிர்வு காலம் முடிந்த பின்னரும் வாடிக்கையாளரிடம் பணத்தை கொடுக்காமல் நிதி நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி