திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுகாதாரக்கேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் பயணிகள் வீசி செல்லும் குப்பையும் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா. அடிக்கடி தண்டவாளம் அருகில் வளர்ந்திருக்கும் புற்கள் சுத்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 3, 4 வது பிளாட்பாரங்களில் ஜூலை 28 முதல் தண்டவாளத்தில் கூடுதல் வேகத்தில் ரயில்கள் இயக்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகள் தொடங்க உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பயணிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதா. பயணிகளின் பயன்பாட்டிற்காக மக்கள் மருந்தகம், ஓட்டல்கள், கேண்டீன் போன்றவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர 2025ல் அமித்பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 16 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு, 1 வது பிளாட்பாரத்தில் அலுவலகம், ஓய்வு அறை உள்ளிட்டவைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது என திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஆர். செந்தில்குமார் தெரிவித்தார்.