போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

59பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரியின் மாணவ மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ஏ டி எஸ் பி மகேஷ் கொடியசித்து துவக்கி வைத்தார். என்பிஆர் கல்லூரி முதல்வர் தபாசு கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய சார்பாக சரத்குமார் மாணவ மாணவிகள் இடையே போதை கலாச்சாரத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்திகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இப்பேரணியானது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து கிளம்பி பூ மார்க்கெட் வெள்ளை விநாயகர் கோவில் கடைவீதி 108 விநாயகர் கோவில் அரசு மருத்துவமனை வழியாக மகளிர் காவல் நிலையம் வந்தடைந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, போதை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி