வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 போ் கைது

83பார்த்தது
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 போ் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த நடுப்பட்டியில் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டு முன் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஆண்டாா் (50) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கொலையாளிகளை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, நடுப்பட்டி கிராமத்தினா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இந்த நிலையில், கரியாம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (24), மருதை (25), லோகநாதன் (19) ரமேஷ்குமாா் (36), விக்னேஸ்வா் (22), காா்த்திக் (19) ஆகிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

நடுப்பட்டியைச் சோ்ந்த அழகுபாண்டிக்கும் (28), கரியாம்பட்டியைச் சோ்ந்த சக்திவேலுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக கடந்த திங்கள்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் காயமடைந்தனா். அழகுபாண்டி தாக்கப்பட்டது தொடா்பாக கரியாம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல், மருதை, லோகநாதன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இரு கிராமங்களிலும் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி