பாதையை அடைத்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

84பார்த்தது
பாதையை அடைத்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சாத்தம்பாடி ஊராட்சி, மதுக்காரம்பட்டியில் அனுப்பச்சியம்மன் கோயில் உள்ளது. அப்பகுதிக்கு அருகில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 80 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும் உள்ளது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த இடத்தை தற்போது தனிநபர் கற்றாழையை வெட்டி பாதையின் குறுக்கே போட்டு மறித்து விட்டார். இதனால் பாதையின்றி தவித்த அப்பகுதி மக்கள் பாதை வேண்டி திங்கட்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட வருவாய் துறையினர்மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசிய அப்பொழுது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு சென்றனர். இந்த மறியல் சுமார் 30 நிமிடம் நடந்தது. நத்தம் செல்ல வேண்டிய நகர் பேருந்து தடைபட்டது. மே
லும் பள்ளி திறந்து முதல் நாள் என்பதால் பள்ளி மாணவர்கள், பயணிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
மேலும் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி