நத்தம்: 207 கிலோ குட்கா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

64பார்த்தது
நத்தம்: 207 கிலோ குட்கா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நத்தம் காவல் நிலைய பகுதிகளில் குட்கா பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனையின்படி நத்தம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் அதிகாரிகள் நத்தம் காவல் நிலையம் கோமணாம்பட்டியில் ஆண்டிச்சாமி (36), என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில், அதை குத்தகைக்கு எடுத்து நடத்திவரும் சித்திரையன் (55),  கோமணாம்பட்டி, நத்தம் என்பவருடைய வீட்டை சோதனை செய்து அதில் சித்திரையன் பதுக்கி வைத்திருந்த 207 குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, சித்திரையனையும், ஆண்டிச்சாமியையும் கைது செய்து நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி