நத்தம்: ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

65பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பூசாரிபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (நவம்பர் 14) நடைபெற்றது. 12-ஆம் நாள் கணபதி ஹோமம் முதல் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நான்கு நாள் கால யாக பூஜை நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 

ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம், அழகர்கோயில், கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலை சுற்றி வந்து கோவில் கலசத்தில் வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார் கலசத்திற்கு ஊற்றினர். இதில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, சிறுகுடி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி