நத்தம் அருகே கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

54பார்த்தது
நத்தம் அருகே கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் கால்நடை பராமரித்துறை மண்டல இணை இயக்குனர் ராஜா ஆலோசனைப்படி , உதவி இயக்குனர் ராஜேஷ் குமார், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி நத்தம் அருகேயுள்ள பாப்பாபட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் கால்நடை ஆய்வாளர் மாரிமுத்து அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் தடுப்பூசி பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் இதுபோன்ற முகாம் நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. எனவே முகாமின்போது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி