ப்ளேஆஃப்ஸிற்கு 4வது அணியாக ஐட்ரீஸ் திருப்பூர் தமிழன்ஸ் தகுதி

81பார்த்தது
ப்ளேஆஃப்ஸிற்கு 4வது அணியாக ஐட்ரீஸ் திருப்பூர் தமிழன்ஸ் தகுதி
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் திண்டுக்கல் மாநகரிலுள்ள நத்தம் என். பி. ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டபுள் ஹெட்டரின் 2வது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸிற்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த திருச்சி கிராண்ட் சோழாஸ் இந்த தொடரிலிருந்து வெளியேறியது. முன்னதாக, இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸிற்கு கோவை சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 4வது மற்றும் கடைசி இடத்தை உறுதி செய்யும் முக்கியப் போட்டியில் திருச்சி மற்றும் திருப்பூர் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய திருப்பூர் அணி 67 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து சரிவை சந்திக்க, இந்த சீஸனில் முதன்முறையாக களமிறங்கிய மான் பாஃப்னா 7வது விக்கெட்டிற்கு கணேஷ் உடன் இணைந்து 84 ரன்கள் சேர்த்தார். அந்த அணிக்கு அதிகபட்சமாக மான் பாஃப்னா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்த சீஸனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். திருச்சி அணியின் பௌலிங்கைப் பொறுத்தவரை அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்களைப் கைப்பற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி