மாணவ மாணவிகளுக்கு பள்ளிச்சீருடையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

53பார்த்தது
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சங்காரெட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1642 பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் சத்துணவு உண்ணும் 1, 05, 022 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சங்காரெட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சாலைப்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அமுதா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நித்திரா, தலைமையாசிரியர் சந்திரா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி