அமைச்சர் பெரியசாமியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

72பார்த்தது
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் துரைராஜ்நாகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கியதோடு, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நலத்திட்ட பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.

தற்போது தொடர் மழை பெய்து வருவதால்பள்ளிகளில் சேதமடைந்த காம்பவுண்டு சுவர்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் நலன் கருதி கூடுதலாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். ஆத்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டி திராவிடர் காலனி சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் உடனடியாக அமைச்சர் பெரியசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாமதம் இல்லாமல் காலனி பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி