வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்களை தயார்படுத்தும் பணி

62பார்த்தது
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தொகுத்து, பிரித்து தயார்படுத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி சனிக்கிழமை மதியம் 4 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடி மையங்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்கள், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்கள், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்கள், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்கள், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்கள், வேடசந்துர் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2121 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18, 77, 414 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

2121 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 2121 தொகுப்பு மற்றும் இருப்பிற்காக 210 தொகுப்பு என மொத்தம் 2331 தொகுப்புகள் தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி