ஐபிஎல் இன்றைய போட்டி - லக்னோவுடன் மோதும் குஜராத்

77பார்த்தது
ஐபிஎல் இன்றைய போட்டி - லக்னோவுடன் மோதும்  குஜராத்
ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 7) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே வெறும் 4 போட்டிகள் மட்டும் நடைபெற்றுள்ளது. அந்த 4 போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை கூட லக்னோ அணி வெற்றி பெறாமல் இருப்பதே குஜராத் அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த 4 போட்டியிலும் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.