சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்

64பார்த்தது
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 7) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அம்மன் தளங்களில் மிக முக்கியமான தலமாக விளங்குகிறது சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் பல்வேறு தரப்பு மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி