500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

84பார்த்தது
ஒட்டன்சத்திரம் அருகே தொழிற்பேட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொத்தையம் வெடிக்காரன் வலசு பகுதியில் சுமார் 74 ஏக்கர் நிலப்பரப்பில் அரளி கூத்து குளம் உள்ளது. ஆனால் அரசு சார்பில் தரிசு புறம் போக்கு நிலம் என ஆவணங்களில் உள்ளது. இந்நிலையில் அரசு நிலத்தில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் புதிதாக தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொழிற்பேட்டை அமைத்தால் தொழிற்பேட்டையில் இருந்து வரும் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படும்.

மேலும் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்படும் ஆகையால் வெடிக்காரன் வலசில் அரசு தொழிற்பேட்டை அமைக்க கூடாது என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம், தொப்பம்பட்டி, கொத்தையம், வெடிக்காரன் வலசு, உட்பட 40 கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அரசு அதிகாரியிடம் இது தொடர்பாக விவசாயிகள் தனித்தனியாக மனு அளித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி