திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணா சாலை பகுதியில் வணிக வளாகங்களும் , மக்கள் பயன்படுத்தும் தினசரி மார்க்கெட் , இஸ்லாமியர்களின் தொழுகை கூடம், வங்கிகள் காவல் நிலையம் தமிழக அரசுக்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களும் அதிகம் உள்ள அண்ணா சாலை பகுதி. இப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள அரசு மதுபான கடையை மாற்றி வேறு இடத்திற்கு வைக்க வேண்டும். இப்பகுதியில் மதுக்கடை இருப்பதால் பெண்கள் பள்ளிக் குழந்தைகள் செல்வதற்கு இடையூராக உள்ளது எனக் கூறப்படுகிறது மேலும் மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை போட்டு செல்வதாலும் ஒரு சில மது பிரியர்கள் அதிக மது போதையில் சாலையோரங்களில் படுத்து உறங்குவதாலும் இடையூறாக உள்ளது என்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பாக குற்ற சாட்டுகள் வைத்து கொடைக்கானல் காவல் நிலையம், கொடைக்கானல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.