புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்.

73பார்த்தது
திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் வருவாய் கணக்குகளின் படி களம் புறம்போக்கு என்ற வகைப்பாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றக் கோரி கொசவபட்டியைச் சேர்ந்த சகாய அருள்ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணைக்கு பின் அளித்த தீர்ப்பின்படி களம் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர், சாணார்பட்டி யூனியன் ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கழிப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. ஓடு வேயபட்ட இடங்களில் இருந்த ஓடுகளை ஆக்கிரமிப்புதாரர்களே அகற்றிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி