ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி, மாங்கரை, டி. புதுப்பட்டி, டி. பண்ணைப்பட்டி மற்றும் பண்ணைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ. 1. 08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, முத்தனம்பட்டியில் ரூ. 15. 00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பொதுமக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.