திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் என். பஞ்சம்பட்டி இருதய ஆண்டவர்
ஆலய ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் தரைதள திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் சதீஷ் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம். பாஸ்கரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர், பிள்ளையார்நத்தம் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகனேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நாகராஜ், திண்டுக்கல் மதுரை மாவட்ட முதன்மை குரு பேரூட் பணி சகாயராஜ் மதுரை மாவட்ட பொருளாளர் சாம்சங், என். பஞ்சம்பட்டி அமலவை அருட்சகோதரி கரோலின் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி அவர்கள் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் தரைதளத்தை திறந்து வைத்தார். நிறைவாக என். பஞ்சம்பட்டி திரு இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை பெர்னாட்ஷா நன்றி கூறினார்.