பழமையான யூகலிப்டஸ் மரம் சாலையில் சாய்ந்தது

82பார்த்தது
கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் மழையின் காரணமாக பல வருடம் பழமையான யூகலிப்டஸ் மரம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேல்மலை பகுதியில் உள்ள மன்னவனூர். இப்பகுதியில் அதிகளவு விவசாயம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. தினம் தோறும் இப்பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணை மற்றும் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் இப்பகுதியை சுற்றி கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, போளூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது காய்கறிகளை மன்னவனூர் சாலை வழியாக கொண்டு செல்வது வழக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதேபோல் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் 3. 30 மணியளவில் மன்னவனூர் கைகாட்டி அருகே பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் பல வருட பழமையான மிக உயரமான யூகலிப்டஸ் மரம் சாலையில் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களோ சுற்றுலா பயணிகளோ மரத்தின் கீழ் பகுதியில் சாலையில் செல்லாதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி