தனுஷ் படத்தில் நடிக்க மறுத்தாரா கங்கனா?

451பார்த்தது
தனுஷ் படத்தில் நடிக்க மறுத்தாரா கங்கனா?
நடிகர் தனுஷ் தான் இயக்கி நடிக்கும் 50வது படத்திற்கு தற்காலிகமாக 'D50' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் கதாபாத்திரம் வில்லத்தனம் கலந்ததாக இருந்ததால் அவர் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கனா, டி50 படத்தில் தான் நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியை போஸ்ட் செய்து, இது பொய்யான செய்தி என பதிவிட்டுள்ளார். மேலும் தனுஷுக்கு என்னால் நோ சொல்லவே முடியாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி