திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான வாகன பேரணி

73பார்த்தது
திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான வாகன பேரணி
பென்னாகரத்தில் திராவிட கழகத்தின் சார்பில் நீட்டை ஒழிப்போம் வாகன பேரணி நேற்று மாலை நடைபெற்றது நீட்டை ஒழிப்போம்.! சமூக நீதி காப்போம்.! என்கிற தலைப்பின் கீழ் திராவிடர் கழகம் மாணவர் அமைப்பின் சார்பாக தமிழகம் தழுவிய வாகனப் பேரணி மற்றும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகன பேரணியில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக கலந்து கொண்டு, பென்னாரத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் தோழர் சத்தியநாதன், வட்டார செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம் அவர்கள் கண்டன உரையாற்றினார். நீட்டை ஒழிப்போம் சமூக நீதே காப்போம் என்கின்ற தலைப்பில் திராவிட கழகத்தின் சார்பில் வாகன பேரணியில் திராவிட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி