ஆடிக்கிருத்திகை ஓட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

55பார்த்தது
அன்னாசாகரத்தில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணி சாமி கோவில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முருகன் அறுபடை இல்ல அன்னதான கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி