ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போதுவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் சின்னாற்றில் 2 ஆண் பிணங்கள் கரை ஒதுங்கின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவலர்கள் விரைந்து சென்று 2 பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவலர்கள் அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் கர்நாடக மாநிலம் உன்சனஅள்ளியை சேர்ந்த தச்சு தொழிலாளி சித்தப்பா என்பதும், காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப் பட்டதும் தெரியவந்தது. மற்றொருவர் யார்
.? எந்த ஊரை சேர்ந்தவர்.? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.