ஒகேனக்கல்: காவிரியாற்றில் குளிக்க பரிசல் இயக்க தடை

62பார்த்தது
ஒகேனக்கல் காவிரியாற்றில் தமிழக மற்றும் கர்நாடக நீர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சமீப நாட்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதமாக காணப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான ராசிமணல், அஞ்செட்டி, தேன்கணிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை முதல் படிப்படியாக அதிகரித்து அக்டோபர் 14 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20, 000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் காவேரி ஆற்றில் குளிக்கவும் பரிசில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி