தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து நீரின் அளவு அதிகரித்தும் குறைந்தும் காணப்பட்டு வரும் சூழலில் இன்று ஜூலை 30 காலை நிலவரப்படி 66 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று பிற்பகல் 2. 30 மணி நிலவரப்படி வினாடிக்கு 75, 000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மத்திய நீர் நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கிட்டு வருகின்றனர்.