தர்மபுரியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்

56பார்த்தது
தர்மபுரியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5-ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேற்று தொடங்கிவைத்தார். கோமாரி நோய் இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது. பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் (NADCP) 5- வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் 10. 06. 2024 இன்று முதல் 30. 06. 2024 வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு 3, 47, 500 டோஸஸ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3, 56, 000 டோஸஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்நிகழ்வில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுவாமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்பிரமணிஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி