தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாராப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தருமபுர வேளாண்மைப் பொறியியல் துறை கோட்டத்தின் மூலம் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் ப
ராமரிப்பு குறித்த கண்காட்சியின் இலவச பராமரிப்பு சேவை முகாமினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் நேற்று (செப்.5) மாலை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் விவசாயிகளுக்கு தனியார் வேளாண்மை இயந்திர நிறுவனப் பொறியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர் கள் மற்றும் துறை சார்ந்த பொறியாளர்கள் மூலம் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடுகள், சிறப்பு உபயோகங்கள், செய்ய வேண்டிய மற்றும் செய்யகூடாத இயக்க முறைகள், பழுதுகள் கண்டறிதல், பழுதுநீக்கம் செய்தல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் தெரிவு செய்தல் உள்ளிட்ட இனங்களில் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலவகையான திறன் கொண்ட டிராக்டர்கள், நவீன உபகரணங்கள் கையாளவும், செயல் முறையில் பணி செய்யும் முறை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிறுவனம் மூலம் பராமரிப்பு பணிகளுக்கு வேலையாட்கள் பட்டியல் விலக்கு அளித்து இலவச சேவைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 150 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.