எர்ரப்பட்டி ஸ்ரீ தாமோதிர பெருமாள் சுவாமி தேர்திருவிழா

64பார்த்தது
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏ. ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ தாமோதர பெருமாள் சுவாமி கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா 9-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழா நிகழ்ச்சி கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 8-ஆம் தேதி தாமோதிர பெருமாள் சுவாமி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், விரதமிருந்து மேல்விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று மங்கள வாத்தியங்கள் மற்றும் வான வேடிக்கைகள் முழங்க, 9 ஆண்டுகளுக்கு பின்பு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ தாமோதிர பெருமாள் சுவாமி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடந்தது. இதில் எர்ரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்த, கோவிந்த கோஷம் முழங்க சாமி தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தவர் பின்னர் திருத்தேர் கோயிலை சுற்றி வந்து நிலை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கியவாறு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பெருமாள் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி