வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த ஆலோசனை கூட்டம்

85பார்த்தது
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த ஆலோசனை கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ வாக்குசாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை இறுதிசெய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இஆப. , தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று (செப்.6) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு முன்திருத்தப் பணிகளான வாக்குசாவடியின் புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.   

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் தனிநபர்களிடமி ருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது. அலுவலர்கள் மேற்கொண்ட களஆய்வின்படியும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

மாவட்டத்தில 5 தொகுதிகளில் மொத்தம் 1489 வாக்குச்சாவடிகள் இருந்தது. வாக்குசாவடி மறுசீரமைப்பு பணியில் தற்பொழுது  11  புதிய வாக்குச்சாவடிகள்/புதிய பாகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வாக்குசாவடி மறுசீரமைப்பிற்கு பின்பு மாவட்டத்தில் மொத்தம் 1500 வாக்குசாவடிகளாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி