தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் ஆகியோர் தலைமையில் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான்மாது தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி மாணவரணி அணி மாவட்ட அமைப்பாளர் எம்பி பெரியண்ணன் இளைஞர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக் குமார் சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் தீர்மானங்களாக வருகின்ற 27ஆம் தேதி மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் அதனைத் தொடர்ந்து கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.