கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சி துவக்கம்

61பார்த்தது
தருமபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர் களுக்கான கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இன்று (03. 01. 2024) இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியவை இணைந்து 2023-2024-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி யின் அவசியத்தை உணர்த்திடும் பொருட்டும் உயர்கல்வியினை தொடர்ந்து பயின்றிடவும் தமிழ்நாடு அரசால் தருமபுரி மாவட்டத்திலுள்ள 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சி இன்று 03. 01. 2024, முதல் 08. 01. 2024 வரை ஆகிய நாட்கள் நடத்தப்பட உள்ளது. எனவே மேற்படி நாட்களில் 12-ம் வகுப்பு பயிலும் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3745 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டல் சார்ந்து கீழ்க்கண்ட கல்லூரிகளின் கல்லூரி வளாகம் கல்லூரி யில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், கலையரங்கம், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவை அறிந்து கொள்ள களப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களை அழைத்துவர மற்றும் அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி