பாப்பாரப்பட்டியில் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

79பார்த்தது
பாப்பாரப்பட்டியில் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சியில் 2023-24-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியதிட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமுதாய கூடம் புனரமைத்தல் பணி மற்றும், 2022-23-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல், அம்ரூத் 2. 0 திட்டத்தின் கீழ் ரூ. 2கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல்,

மற்றும் 6-வது நிதிக் குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ. 92 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம், கழிப்பறை அமைத் தல் பணி, நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் தார் சாலை, சிமெண்டு சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த
பணிகளை ஆட்சியர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 கோடியே 19 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி