நெல்லில் அதிக மகசூல் பெற வேளாண் அதிகாரிகள் அறிவுரை

53பார்த்தது
தர்மபுரி வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தர்மபுரி வட்டாரத்தில் கார் பருவ சாகுபடிக்கு, நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. நெல் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள், போதிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளிலும், விதைகள் மற்றும் உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் தர்மபுரி மற்றும் கிருஷ்ணாபுரம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் நுண் ணூட்ட உரக்க் கலவையில், கலவையில் சிங் சல்பேட், மக்னீசியம், துத்தநாகம், போரான், இரும்பு, மாங்கனீசு, தாமி ரம் ஆகிய நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்குத் தேவையான அளவு உள்ளன. இதனால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கிறது.

பிற பேரூட்டச் சத்துக ளான தழை, மணி, சாம்பல் சத்துகளும் பயிருக்கு நன்கு கிடைக்கிறது. நெல்நுண்ணூட்டக் கலவையில், மக்னீசியம் சத்து இருப்பதால், இலைகளில் பச்சையம் குறையாமல் நோய் எதிர்ப்பு சக்தியும், மகசூலும் அதிகரிக்கின்றன. இதனை 25 கிலோ மணலுடன் கலந்து சீராக வயலில் தூவ வேண்டும். வயலை சமன் செய்த பிறகு நடவுக்கு முன்னும், நடவு செய்த 10 நாட்கள் வரையும், நுண்ணூட்ட உரத்தை இடலாம். எனவே, விவ சாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரி வாக்கமையங்களில் உரங் களை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you