கடத்தூரில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் விசிக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் நேற்று கூட்டம் நடைபெற்றது மாவட்டத் செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாலையா வரவேற்றார் மேலும் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் மற்றும் நந்தன் மாவட்ட பொருளாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.

இதில் அண்மையில் நடைபெற்ற வெல்லட்டும் ஜனநாயகம் மாநாட்டு வெற்றியை அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நிறைவேற்றிய 31 திர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது 2024 நாடாளுமன்ற தேர்தலில் EVM machine தவிர்த்து வாக்கு சீட்டை நடைமுறைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விசிக சார்பில் கோரிக்கை அளிப்பது மற்றும் விசிக இணையதளத்தை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் திர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. சிவன் திருப்பதி , கடத்து பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத் ஒன்றிய துணைப் பொதுச் செயலாளர் ராஜசேகர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி