தர்மபுரி: ஆளில்லா வீட்டில் கைவரிசை..!

1887பார்த்தது
கடத்தூர் அருகே திண்டலனூர் கிராமத்தை சேர்ந்த மாது மகன் பெருமாள் டிப்பர் லாரி டிரைவர். இவரது வீட்டில் 3 பவுன் தங்க சங்கிலி, 4 கிராம் தங்க தோடு ஆகியன திருட்டு போனது. இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், பெருமாள் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த சில்லாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மகன் விஜய் வீட்டுக்குள் சென்று தங்க சங்கிலி, தோடு ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் விஜயை கைது செய்து அவரிடம் இருந்து தங்க நகைகளை மீட்டனர். அதன் மதிப்பு சுமார் ரூ. 90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி