பாமக நிறுவனர் ராமதாஸின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் , விடிவெள்ளி நகர், ஒட்டுப்பட்டி விஜயநகரம் பழைய ஒட்டுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்சியின் கொடிகளை ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஓகே சிவகுமார் , மாவட்ட தேர்தல் பணி குழு செயலாளர் அறிவழகன், கட்சியின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் துரை, கிருபாகரன், ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, நகரச் செயலாளர் கார்த்திக், நகர தலைவர் வெங்கட்ராமன், பேரூராட்சி கவுன்சிலர் பழனி, பொன்னியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா, நகரப் பொறுப்பாளர்கள் சந்திரசேகர் வினோத் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, மாதேஷ், குப்புசாமி, ராஜி, குப்பன் , ராஜேந்திரன், குட்டி, பூங்காவனம், மணலூர் வையாபுரி, சொரக்காபட்டி காளியப்பன் , மற்றும் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.