தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயணத்தின் கிராமத்தில் டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையை அகற்றுக்கோரி செப்டம்பர் 24 நேற்று பொதுமக்கள் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தலையில் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கடை மூடி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.