தர்மபுரியில் மக்கள் அவதி..வீடியோ!

3325பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2 வாரங்களாக பனிமூட்டத்துடன், கடும் குளிர் வீசுகிறது. மாவட்டத்தில் சராசரி வெப்பநிலை அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 18 டிகிரியுமாக உள்ளது. கடந்த 25ம் தேதி 20 டிகிரி செல்சியசும், 26ம் தேதி 19 டிகிரி செல்சியசும், 27ம் தேதி 18 டிகிரியுமாக குறைந்தது.

காலை நேரத்தில், எப்போதும் இல்லாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கடும் குளிர் வீசுவதால் தர்மபுரி, இலக்கியம்பட்டியில் உள்ள பள்ளி, அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களில், அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மாலையில் 5 மணிக்கு தொடங்கி பகல் 11 மணி வரை பனி மூட்டம் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி