பாப்பிரெட்டிப்பட்டி: பாலம் கட்ட கோரிக்கை வைத்த மக்கள்

72பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அருகே உள்ள பொதியன் பள்ளம் தடுப்பணை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, கூடுதல் கலெக்டர் கௌரவ்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று நவம்பர் 07 ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வசிக்கும் விவசாயிகள், மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்து பொதியன் பள்ளம் தடுப்பணை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை எனவே இங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி